வஞ்சையும் புஞ்சையும் விளைந்தவிடத்தே
ரத்தமும் சதையுமாய் விளைந்தது இத்தேகம்
காலம் வளர தேகம் வளர... வளர்ந்தது இவ்வெஞ்சினமும்
இது சந்தர்ப்பங்களாலும் சந்ததிகளாலும் உருவாக்கப்பட்டது
சத்தியங்களையும் சபதங்களையும் கடந்து நிற்பது ..
அன்புச்சினம் அழகானது அனைவராலும் அறியப்பட்டது
காலத்தின் கோலமாய் தாய் மகன் மீது காட்டுவதும்
மகன் தாய் மீது காட்டுவதும் அழகான அன்புச்சினம்
இது எல்லையற்ற பாசத்தின் வெளிப்பாடு ...
செங்குருதியின் செருக்கும், குருதியின் ஓட்ட வேகமும் துடிப்பும்
நாட்டமுள்ள நல்லெண்ணங்களும்.. மறுப்பு சொன்னால்
வெறுப்புக் கொண்டு செருக்கெடுக்கும்
வீரம் விழைந்த வெஞ்சினங் கொண்ட இளநெஞ்சங்கள் கொள்வது
முன் கோபம் ...
சுண்டிய குருதியும், சூட்சம குணமும்,
திடகாத்திர மனமும் திகழ..
பட்ட துயரை வெட்டிச் சாய்க்க
தக்க தருணம் வேண்டி துயில் கலைத்து
விழித் துளி நீர் துடைத்து விடிய விடிய
விரதம் இருந்து பெற்ற வரம் பிற்க் கோபம் ..
மகிழ்ச்சியின் சூட்சியாய் இருப்பது கொடுக்கும் வாக்குறுதி..
அதுபோல் வெஞ்சினத்தை வேரோடு சாய்ப்பது எடுக்கப்படும் திடீர் முடிவுகள்
அரசன் ஆண்டியாவதும், ஆண்டி அரசனாவதும் விதி
இது விதியின் தத்துவம் ...
ஆக்கப்பட்டவையாலேயே அழிக்கப்படுவது மானிடத்தின் விதி
இதில் தப்பிச் செல்ல இங்கேது வழி...
ஆனால் விதியை மதியால் மிதி
இது சான்றோர் குறி
அதன் படி நீ நடத் துடி ...
இங்கு சினத்தை வகையிட முனைந்ததின் காரணம் சினம்
விதியை விளக்கிட முனைந்ததின் காரணம் விதி..என் தலைவிதி..
சினத்தை சிறையிட முயன்றவன் பேசுகிறேன்
விதியை விலங்கிட முயன்றவன் பேசுகிறேன் ...
No comments:
Post a Comment