Monday 30 August 2010

கொலையாளிகள்

என்நாட்டில் பெண்களும் கொலையாளிகள்தான்... ஏனெனில் அவர்களது காதற்க் கொலைகளிற்க்கு அளவுகணக்கில்லை..

பொய்யானது

பெண்ணே உனக்குத் தெரியுமா கண் எவ்வளவு பொய்யானது என..??? ஏனெனில் உனது ஒவ்வொரு விடயத்தையும் அழகாய்க் காட்டுகிறதே...??

Saturday 28 August 2010

தொலைத்தவர்கள்

காதலால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர் ..
ஆனால் வாழ்க்கையில் காதலைத் தொலைத்தவர்களில் நானும் ஒருவன்..

காதல் சொல்ல வந்தேன்

பெண்ணே உன்னிடம் நான் காதல் சொல்ல வந்த போது
சுற்றிச் சுழலும் காற்றின் வேகம் பலத்தது..
சிறை கொண்டு நிறைவாக்கும் எனது மூச்சின் பாரத்தை உணர்ந்தேன்..
உடலெங்கும் அக்கினி பூத்தாற்ப் போல் உஸ்ணமழை..
வார்த்தைகள் ஊமையாகும் இடத்தில் எழுத்திற்க்கு உயிர்கொடுத்து..
நான்காண்டுக் காதலை நாலுவரிக் கவிதையாக்கி..
கையில் எடுத்து வந்த.... எனது வாழ்க்கை மடல்
வியர்வையில்த் தெப்பமாக வெப்பமான் காற்று வந்து
கைகொடுத்துச் சென்றது..

அன்று உன்னை நோக்கி எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும்
எனது வாழ்வின் எல்லை வரை கொண்டு சென்று ..
நட்பு எனும் வேலி போட்டுத் தடுத்து வைத்தது ..
இது எனது நான்காவது முயற்சி..

ஏமாளிகள்


காதலிக்கும் ஏமாளிகள் இருக்கும்வரை காதல் ஏமாற்றங்களிற்க்குக் குறைவில்லை.

Thursday 26 August 2010

சந்தணத்தென்றல்

மறக்காது நன்றி சொல்கிறேன் இந்தக் காற்றிற்க்கு..ஏனெனில் அவளது ஒவ்வொரு பார்வையின் போதும் சந்தணத்தென்றலை வீசி எனக்குணர்த்தியமைக்கு...

கலக்கிறதே

பள்ளி செல்லும் போது பார்த்திருந்த காலங்களும் .. பாடசாலையில் உன்னையென்னி வேர்த்திருந்த காலங்களும் கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம் போல் கலக்கிறதே என் நினைவுகளுடன்....

நீயின்றி


ரத்தமின்றி யுத்தமா...?? சத்தமின்றி முத்தமா..?? குற்றமின்றி சுற்றமா..?? நீயின்றி நானா..??

Wednesday 25 August 2010

புரிந்துகொள்கிறேன்


ஏமாற்றங்களும் தோல்விகளும் ஒரு மனிதனைப் பூரணமாக்கும் என்பதை தோற்க்கும் போது புரிந்துகொள்கிறேன்....

Friday 20 August 2010

ஜீவன்கள்

பெண்ணே உனது புன்னகையால் நீ மகிழ்ச்சியடைகிறாயோ இல்லையோ.. ஆனால் என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான ஜீவன்கள் உயிர்வாழ்கின்றன...

சாதனைப் புத்தகம்

வருங்காலத்தில் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வேண்டிய விடயம்... காதலித்த பெண்ணை மணந்துகொள்வது

லண்ட்சம்


காதலன் காதலிக்குக் கொடுக்கும் லண்ட்சம் கவிதை

அகராதி

பெண்ணே உன் கண் பேசிய ...
அகராதியில் இல்லாத வார்த்தை என்ன..
கூறினால் பதிவிட முயற்ச்சிக்கிறேன்.....

கைதி

நேற்றுவரை நீயாரோ நான் யாரோ... ஆனால் இன்று நெருங்கிய உறவுபோல் ஒரு உணர்வுகளுடன் உன்னருகே மெளனத்தின் கைதியாக......

Thursday 19 August 2010

குரங்காட்டி

தற்க்காலக் கணவனின் நிலை குரங்காட்டி கையிலுள்ள குரங்கு மாதிரி...
ஆர்ரா ராமா ஆர்ரா ராமா...

Tuesday 17 August 2010

காதலிக்கிறேன்


என்றும் கலையாத உனது நினைவுகளைக் கொண்டு.. காற்றுடன் காதலிக்கிறேன்.....

Sunday 15 August 2010

கானல்நீர்


ஒவ்வொரு புது வருடத்தின் போது எடுக்கப்படும் முடிவுகள்.. கோடைகால கானல்நீர் போல்....

Saturday 14 August 2010

ஆட்க்கொல்லி நோய்


ஆட்க்கொல்லி நோய்களிற்க்குள் புதிதாய் அறிமுகப்படுத்திய நோய்... காதல்

Friday 13 August 2010

இதுதான் காதலா


அனைவருக்கும் படுத்திருந்தால் கனவு வரும் ..
ஆனால் எனக்கோ கவிதை வருகிறது... இதுதான் காதலா...???

மின்சாரம்


பெண்ணே நானும் நாட்டிற்க்கு சேவை செய்கிறேன்...
உன்னைப் பார்க்கும் போது உடலெங்கும் பாயும் மின்சாரத்தை விநியோகிக்கிறேன் கிராமங்களிற்க்கு....

நினைத்தது

அறிய நினைத்தது அவளைப் பற்றி.
புரிய நினைத்தது அவளது மனதை..
புரிந்து தவித்தது அவளது காதலை.....

Thursday 12 August 2010

தத்துவங்கள்


தவறுகள் இல்லாது தத்துவங்கள் பிறப்பதில்லை...
காதல்த் தோல்விகள் இல்லாது காதலி உனக்கேது...

Wednesday 11 August 2010

கவிதை எழுதுவது

கவிதை எழுதக் காரணம் வேண்டுமா இல்லைக் காதலி வேண்டுமா..?
காரணத்திற்க்கு எழுதுவது கவிதையல்ல கடிதம்...
காதலிக்கு எழுதுவது கவிதையல்ல காதல்க் கடிதம்..

எனது காதல்


பெண்ணே எனது காதல் facebookல் மறைக்கப்பட்டிருந்தாலும்
உனது மனதில் மறுக்கப்படவில்லை....

ஜல்லிக்கட்டுக் காளை


ஜல்லிக்கட்டுக் காளையாக் இருந்த என்னைக் காதல் எனும் தவிட்டு மூட்டையைக் காட்டி அடக்கி விட்டாயே....

நீலாம்ஸ்ரோங்


பெண்ணே நிலா போன்ற உன் முகத்திலே.. முதன் முதலாக காலடி பதிக்க வருகிறேன்.. நீலாம்ஸ்ரோங் போல்...

மறுக்கின்றன


பெண்ணே உன்னைக் காதலித்த பாவத்திற்க்கு..
என் கல்லறைப் பூக்களும் கண்ணீர் வடிக்க மறுக்கின்றன...

நடிப்பு


காதலில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம்..
ஆண் நடிக்க முயற்ச்சிப்பவன்..
பெண் நடிக்கத் தெரியாதவள் போல் நடிப்பவள்..

நம்ப முடியாதது


காதலில் இழக்கக் கூடியது சந்தேகம்...
காதலில் இழக்கக் கூடாதது நம்பிக்கை..
காதலில் நம்பக் கூடியது காதலை..
காதலில் நம்ப முடியாதது பெண்களை...

மனதின் ஆழம்

பெண்ணின் மனதின் ஆழத்தைக் காண இறங்கினேன்...
கடைசியில் நான் கண்டது சொர்க்கத்தின் வாசற்க்கதவுகள்.....

கண் இல்லை


எதிர்பார்த்த போது வராத காதல் வெறுத்த போது வருகிறது...
காதலுக்குக் கண் இல்லை என்பது உண்மைதான்...

Tuesday 10 August 2010

சங்கம்

காதலில் தோல்வியுற்ரோருக்கு ஒரு சங்கம் அமைத்தேன்.. அது எனது நாட்டின் சனத்தொகையைத் தாண்டிவிட்டது...

Monday 9 August 2010

அருமை


நிழலின் அருமை வாடியிருந்த போது..
தண்ணீரின் அருமை தவித்திருந்த போது..
உணவின் அருமை பசித்திருந்த போது...
காதலின் அருமை.. உனைப் பிரிந்திருந்த போது...

Sunday 8 August 2010

அம்மா


ஈரைந்து மாதங்களும்..
இனையற்ற பாசங்களுமாய்..
முதன் முதலா நீ பெற்ற..
முதல் முத்து நானம்மா..
நீ முதன் முதலா அனைச்ச போது
ஓ என்று அழுதிருந்தேன் அதை...
நீ சொல்லித் தெரிஞ்சிருந்தன்...

என் அடி வயிறு அழுதிட
நானும் அழுதிட
அவதிப்பட்டு ஓடிவந்தாய்
அனைத்து ஒரு முத்தமிட்டாய்..

பசித்திருந்த போதெல்லாம் ...
உன் உதிரத்தைப் பாலாக்கி
என் பசியை நீ போக்கி வைத்தாய்..
இரவு பகல் பாராமல் இனையற்ற பாசத்தை நீ தந்தாய்...

பள்ளி போகும் வயது வர
பள்ளியிலே சேர்த்த போது
பதறியடித்து ஓடிவந்தேன்
பள்ளியிலே தனிதிடுவேனோ என்று
உடனே பக்குவமாய் எனையனைத்து
தலை கோதிவிட்டு..மிட்டாய் தந்து
பள்ளியிலே சேர்த்து விட்டு..
வாசலோரம் கண்கலங்கி நீ நின்றாய்...

இவ்வாறு நான் பட்ட கடனையெல்லாம்
எவ்வாறு தீர்ப்பேனோ...
ஈரேழு ஜென்மம் எடுத்தாலும்
என் கடன் தீராதம்மா..
எப்பிறப்புப் புண்ணியமோ..
நீ எனக்குத் தாயானாய்
நான் உனக்குச் சேயானேன்..
ஏழேழு ஜென்மமும் நீ எனக்குத்தாயாக..
நித்தமும் இறைவனை வேண்டுகிறேன்...

வாழும் காதல்


உண்டாகும் காதல் எல்லாம் வாழ்வதில்லை... வாழாத காதல் எல்லாம் சொர்க்கத்தைச் சேரும்... வாழும் காதல் எல்லாம்.... நரகம் ஆன புவியைச் சேரும்.

Saturday 7 August 2010

தெரியுமா


எனக்குத் தெரியும் நீ விரும்புவது என்னையல்ல என் கவிதைகளைத் தான்னென்று..... ஆனால் உனக்குத் தெரியுமா உன்னை விரும்புவது என் கவிதைகள் இல்லை நான் என்று........!!!!!

உன்னைப் பார்த்த பின்


நேற்றிருந்த ஞாபகங்கள் இன்றில்லை... நேற்றிருந்த எண்ணங்கள் இன்றில்லை... நேற்றிருந்த கனவுகள் இன்றில்லை... எல்லாம் செக்கு மாடு போல் உன்னையே சுற்றுகின்றன... உன்னைப் பார்த்த பின்...!!!!

ஊமை


வாய் பேச முடிந்தும் ஊமை நான்... நீ அருகில் இருந்த போது..





உனக்காக

சூரியனில் ஒளி உள்ள வரைக்கும்..... பூமியில் காற்றுள்ள வரைக்கும்..... தீயில் சூடுள்ள வரைக்கும்.. உனக்குள்ளே நான் இருப்பேன் உனக்காக பெண்ணே....!!!

நீ என் அருகிலிருந்தால்


வானிலுள்ள சூரியனையும் சந்திரனையும் உன்னிரண்டு தோடுகளாக்குவேன் நீ என் அருகிலிருந்தால்...... விண்ணிலுள்ள நட்சத்திரங்களால் ஒரு வீடு செய்வேன் நீ என் அருகிலிருந்தால்..... இவையெல்லாம் கற்பனையும் அல்லகவிதையும் அல்ல நீ என் அருகிலிருந்தால்......!!

தோழியா இல்லை காதலியா


ஆபத்தில் கை கொடுத்தாய்... சோகத்தில் தோள் கொடுத்தாய்.... இதற்க்கு மேல் உறவுகளையும் கொடுத்தாய்.....!!! நீ என் தோழியா இல்லை காதலியா...??

Friday 6 August 2010

காத்திருக்கிறேன்


சட்டென்று கடந்துசென்ற பூங்காற்று மீண்டும் திரும்பி வராதா என்று கண்கொட்டக் காத்திருக்கிறேன் கடற்கரையிலே...!!!

ஜாதி மத பேதம்


ஜாதி மத பேதம் இன்றி வந்த காதலிற்க்கு நான் அழகில்லை என்பது தெரியாதா.. ஒவ்வொரு கணமும் துடிக்கிறேன்..... பெண்ணே..... உனது முடிவைக் கேட்டு....!!!

காதல் கொண்டால்


இரவு பகலாகும்.. பகல் இரவாகும்..... சூரியனும் சந்தனம் பூசும் சந்திரனும் நெருப்பள்ளி வீசும் நீயும் காதல் கொண்டால்...!!

ஆராட்சியாளன்



தொல்பொருட்க்களாய்த் தொலைந்த எனது நினைவுகளை... தூசுதட்டிப் பார்க்கிறேன்.. புதிய ஆராட்சியாளனாய்....

எதிர்பார்ப்பு



ஒரு மகன் தாயிடம் எதிர்பார்ப்பது பாசம்..
ஒரு நண்பன் இன்னொருவனிடம் எதிர்பார்ப்பது நட்பு..
ஒரு காதலன் காதலியிடம் எதிர்பார்ப்பது காதல்....
ஆனால் நீ என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய் புரியாது தவிக்கிறேன்...
உன்னைக் காதலிக்கத் தொடங்கியதில் இருந்து.....

நவீனக்காதல்



புராதண முறைக்காதலோ...சிந்தித்திரு நிந்தித்திரு.. எதிர்பார்த்திரு.... ஆனால்
நவீன முறைக்காதலோ... பசித்திரு தனித்திரு விழித்திரு ........

Thursday 5 August 2010

மாயை



காதலிற்க்கும் பெண்ணிற்க்கும் இடையே உள்ள ஒற்றுமை...... இரண்டுமே மாயை....

Wednesday 4 August 2010

பள்ளிக்காதல்




நான் படித்த பள்ளியிலே..
நீ படிக்க வந்திருந்தாய்...
உடனே உன்னைப் பார்த்து...
உள்ளாரக் காதலிச்சன்...
நான் படிச்ச தழிழையெல்லாம்.
நாலுவரிக் கவிதையாக நாளாந்தம் எழுதிவச்சன்....
காலாற நடை போட்டு.. காதோரம் கவி சொல்ல.....

யாரு செய்த குற்றமோ நாலுவரிக் கவிதையெல்லாம்..
உன் அண்ணனிடம் சிக்கியது..
சிக்கியதை எடுத்துக் கொண்டு சீறி வந்து...
முறை முறைத்தான்...
நானும் முறைத்தபடி மனசுக்குள்ள தேற்றிக்கிட்டன்...
வருங்கால மச்சானே என...

மறு நாளோ இதை மறந்துவிட்டு...
இஸ்ரப்பட்டுக் காதலிச்சேன்....
கஸ்ரப்பட்டுக் காதல் சொன்னேன்.....
நான் செய்த புண்ணியம்..
உதட்டோரம் புன்னகையாய்ப் பூத்திருந்தது...

அறியாத வயசில...புரியாமற்ப் புதிர் போடும்
காதலுக்கு அடிமையானேன்...
பரீட்சையில் கோட்டம் விட்டேன்..
பரீட்சையில் சித்திபெற்றவளோ...
சிக்கியதைச் சுருட்டிக் கொண்டு.. சிங்கப்பூர் ஓடி விட்டாள்...

பள்ளியிலே கோட்டம் விட்டேன்...
பரீட்சையிலே கோட்டம் விட்டேன்.....
காதலிலே கோட்டம் விட்டேன்...
கடைசியிலே நாடு விட்டு நாடு வந்து
நாலு காசு நான் சேர்த்தேன்..

சேர்த்ததையும் கொள்ளையடிக்க..
ஒரு சிரிக்கி வந்து விட்டாள்....
அவள் தான் என் பெண்ஜாதி...

காலம் பல போயிடிச்சு
காதலும் மறந்து போயிடிச்சு....
கழுத்தை நீட்டியவளைக் கண் கலங்காமப் பாத்துக்கிட்டேன்.....

சிறிது காலம் சென்ற பின்னர்...
சிலோனுக்குத் திரும்பி வந்தேன் ..
எதிர்பாராத விதமாக எதிர் வந்து தான் நின்றாள்..
ஏமாத்திப் போன சிரிக்கி....

ஏதேதோ கேட்க்க நினைச்சேன்...
எக்கச்சக்கமாய் பேச நினைச்சேன்....
மனசென்ன சொன்னாலும்...
மனசுக்குள்ள...நீ இருந்தாய்...
பேசாம போயிட்டன்....
பேசி என்ன புரியோசனம் என்று.....

Tuesday 3 August 2010

கருவாட்டுச்சிரிக்கி



முதல்வாட்டி நான் பார்த்தேன்.....
முதன் முதலா நான் தோற்றேன்...
கருவாட்டுச்சிரிக்கி அவ கழுத்தில தான்
கரு கரு எனக் கறுத்திருந்த மச்சந் தான்
பெற்ற வரம் நான் பெறவில்லையடி.....

காலாற நடை போட்டு...
கையாட்டி நான் போக...
காதோரம் நீ வந்து சொன்ன கடி ஜோக் இன்னும்
கடிக்குதடி காதுக்குள்ள...

மனசாறச் சொல்லும் போது
மனசுக்குள் நீ வந்து
மஞ்சங் கொண்டாய் மயிலழகே.....
உன்னை வாயாறச் சொல்லும் போது
வாயெல்லாம் வடியுதடி
கருங்கூட்டுச் செந்தேனாய்......

கனவிலும் கண்டதில்லை
நான் ரசித்த கருவாட்டுச்சிரிக்கி வந்து
கழுத்தில மாலை போடுறத....

நான் செய்த பாக்கியமோ
என் தாய் செய்த பாக்கியமோ
காலத்துக்கும் என்னைக் கடன்காரன் ஆக்கிவிடாள்
தனக்கு கஞ்சி ஊத்தச் சொல்லி....!!!