Sunday, 1 August 2010

Facebook காதல்




அவளோ அந்தபுரத்து அன்னக்கிளி.....
பணக்காரனின் பச்சைக்கிளி.....
இந்த மாயையான..facebookல்..
பொன்னான நேரத்தை மண்ணாக்க எவனாவது
ஏமாந்த சோனகிரி வருவான்...
அவனின் தலையிலும் மிளகாய் அரைக்கலாம்....
என்று எதிர் பார்க்கும் நவீன நாசக்காரி அவள்...

அதையறியாது....
எப்படி ஒருத்தியை ஓரங்கட்டலாம் என்ற..
குள்ளநரிக் குறுக்குப் புத்தியுடன் facebookல்
நுழையும் சகலகலா வல்லவன் இவன்.....

இப்படியாக இருவரும் மாறி மாறி...ஒவ்வொருவர் தலையிலும் இலுப்பங்காய் பறித்துக் கொண்டிருக்கும் போது...
அறியாத தட்ப்பமாய் புரியாத வெட்ப்பமாய்....நுழைகிறது இந்த இத்துப் போன காதல்..

தற்ப்போது ஏமாந்த சோனகிரியோ... உளங்கவர் கள்வன்....
ஆனால் அவனோ.... மடிசார் மாமி முதல் படிசார் பத்மினி வரை.. பல மைனாக்கள் மனதைக் கொள்ளையடிக்கும் மன்மதன்...

இவ்வாறே... இருவரது மனதும் facebook ஐ விட்டு.. மோசமான messengerக்குள் நுழைகிறது...

அவ்வாறே அவனும் இல்லாத பொல்லாத.... பொய்யைச் சொல்லி.. நவீன முறைக்காதலான webcamக்கு இழுக்கும் போது...
எமனுக்கு இடியப்பம் தீத்தியவள் போல் பூம் பூம் மாடு போல்... தலையாட்டிக் கொண்டே.. போகிறாள்...

பொன்னம்பலத்தின் பொய்ப்பித்தன் இவனோ..... அவளை அழகென்றதும்... முப்பத்திரெண்டு பல்லைக் காட்டி..காது வரை சிரிப்பாள்.....

இப்படியே சிறிது காலம் உள்வீட்டுக் கள்வர்களாய் இருவரும் இருந்த போது...

சந்தேகச் சர்ப்பம் நுழையும் போது கற்ப்புக்கரசியாக் மாறி.. எரித்தபடி முறித்துக் கொள்கிறாள் இத்துப் போன..facebook காதலை.....

மறு நாள் அவளோ...அந்தபுரத்து அன்னக்கிளி பணக்காரனின் பச்சைக்கிளி.......

No comments:

Post a Comment