Thursday 30 December 2010

கணத்தின் கதை


இமயமது கடந்தாலும்.. என் இனியவள் இதயமது கடக்க
இருபது நூற்றாண்டு வேண்டும்...
வேண்டுகிறேன் மறு பிறவி.....
தூண்டுகிறேன் இளமையைப் பொங்கியோடும் காதலாக...
மண்ணினில் மாண்ட மானிடர் மீண்டு கணங்களாய் மாறிக்
கலந்திட்ட கதையும் அறிவேன் ....
என் கண்ணினில் உன்னைக் கலக்கிடும் சங்கதி அறியட்டும் வரும் சந்ததி
சுற்றமே என்னைச் சூழ்திட்ட போதிலும் பெற்றனே வரம் மறுபிறவியாய்
குற்றமேயானால் குறைகளை கூறிடும் ... சுத்தமே ஆனால் சூழ்ந்து வாழ்த்தி வணங்கிடும்...

வஞ்சி


என்னை மிஞ்சிய வஞ்சியை.. வெஞ்சினங் கொண்டு பாரினில் வீழ்த்திட எண்ண.... அவளது துஞ்சமிகு அழகைக் கொஞ்சிடக் கெஞ்சும் மஞ்சங் கொண்ட என் மனதை என்செய்குவேன்

கண்ணீர்

மேகம் தரும் சோகம் தான் மழை ....
யாகம் தரும் சாபம் தான் வரம் ..
காதலி தரும் கண்ணீர் தான் காதல்..

ஊமை இரவுகள்


ஒவ்வொரு இரவுகளும் ஊமையாகும் இடத்தே கனவுகள் பேச ஆரம்பித்து விடுகின்றன...கனவுகள் தடுமாறும் போது காற்றடைத்த வெற்றிடமாக மாறுகிறது மனது அப்போதுதான் நீ வருகிறாய் என்னில் மஞ்சங்கொள்ள....

Sunday 5 December 2010

காதல்


நெருக்கம் தரும் உருக்கத்தின் சுருக்கம் தான் காதல்

சந்தர்ப்பம்

நீ ஒரு முறை தர மறுத்த சந்தர்ப்பம் ஆயுளிற்க்கும் என்னை நினைக்கவைக்கும் என்பதை நீயறியவில்லை...

உனது பெயர்

காதல் நரம்பறுந்த பின்பும் .. உதடுநோக உச்சரிக்கும் உனது பெயர்தான் இன்னும் என்னை உயிரோடு வைதிருக்கிறது...

Sunday 28 November 2010

மந்திர வார்த்தை

மூன்றெழுத்து மந்திர வார்த்தை கேட்டால் எந்திரமும் தந்திரமாக காதல் செய்யும் சுதந்திர பூமியில் .. காதல் சூத்திரம் தேடி யாத்திரம் செய்யும் பாத்திரம் தான் நான் .. இறுதியில் கொண்டது ஆத்திரம், குலம் கோத்திரம் கேட்க்கும் காதலிற்க்கு சாத்திரம் சொல்லும் சாமி நானல்ல

பிரிவு

காதல் பிரிவு காதலை வலுவாக்கும்.. காற்றுப் பிரிவு சுவாசத்தை இலகுவாக்கும்... ஆற்றுப் பிரிவு அமைதியைக் கலைக்கும் .. சோற்றுப் பிரிவு வயிற்றைப் புண்ணாக்கும்.. நாற்றுப் பிரிவு நல்விளைச்சல் தரும்.. கூற்றுப் பிரிவு தெளி விளக்கம் தரும்..... கற்ப்புப் பிரிவு கலக்கம் தரும்.. மூச்சுப் பிரிவே முழுவதிற்க்கும் விடை தரும்.....

மந்திரப்புன்னகை

மனதை மையல் கொள்ளும் உனது மந்திரப்புன்னகையில் மதியிழந்த மைந்தனில் நானும் ஒருத்தன்

காதல் மச்சம்

அவளோ அழகின் உச்சம், நானோ அதில் ஒரு சொச்சம்... இறுதியில் காதலின் பட்சத்தில் கேட்கிறேன் ஒரு காதல் மச்சம்...

கறுப்பு வெள்ளை

வர்ணத்தில் பொது வர்ணம் கறுப்பு, வெள்ளை.. அதற்க்கு வர்ணம் தீட்டி பிளவு காட்டி..... வார்த்தையில் நஞ்சூட்டிக் கூறுகிறது.. நீ கறுப்பு நான் வெள்ளை...

வன்மைகள்


பெண்மையும் மென்மையும் செம்மையான வன்மைகள்

Thursday 25 November 2010

ஒருதலைக் காதல்

ஒற்றைத் தலைவலியாய் பன்னிரண்டு ஆண்டுகளாக நாவுக்கடியில் புதைந்திருந்த அந்த வார்த்தைகளையும், உன்னில் தொலைந்திருக்கும் என்னையும், என்னில் மறைந்திருக்கும் உன்னையும் தேடும் முயற்சியில் கழியட்டும் எனது மீதி வாழ்க்கை...

Tuesday 23 November 2010

புன்னகை

ஊமையின் உதட்டில் இலவசமாய் வரும் வார்த்தை.. உனது உதட்டில் தவழவிட்டால் முத்துக்கள் சிதறிடுமோ...

மறுபிறவி


வாள் வலி, போர் வலி, வாய் வழி வந்த வலி போய்.... செயல் செயற்க் கண்டு வந்த வலியைச் செம்மையாக்க எடுக்கிறேன் பேனாவை....

வாழ நினைக்கிறேன்

மானம் மலையேற.... மனம் சிறையாக.. உடல் இரையாக... உணர்வுகளிற்க்கு விடுதலை கொடுத்து.. உத்தமபுத்திரனாய் வாழ நினைக்கிறேன் இந்த சமுதாயத்திலே....

நஞ்சு

குணம் கொள்ளும் மழையும் அறியும் ... மணம் கொண்ட பூவும் அறியும்... பிணம் தின்னும் கழுகும் அறியும் ....ஆனால் பணம் தின்னும் மனிதர் மட்டும் ஏன் அறிய மறுக்கிறார்கள், அழவிற்க்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சென்பதை.........

Thursday 21 October 2010

காதலின் கற்ப்பனை

பறக்கும் பூனைகள் ..சிரிக்கும் காகங்கள்... சிநேகிதம் கொள்ளும் சிங்கங்கள்... இவைகள் நடுவே கனவில் எனக்கென்ன வேலை........காதலின் கற்ப்பனைக்கு அழவேயில்லையா..

காரணம்

தினமும் இரண்டு முறை பல் துலக்குகிறேன்... இரவில் கனவு பசிக்கிறது.. விடியல் வெறுக்கிறது.. உணவிருந்தும் விரதமிருக்கிறேன்... காரணம்..?

மொத்தவடிவம்

ஆயிரம் பட்டாம்பூச்சியின் ஆனந்தம்...ஆரத்தழுவும் அன்புமழை.... அர்த்தமுள்ள கவிதைகள்..அத்தனையும் உருவெடுத்த மொத்தவடிவம் நீதானடி பெண்ணே.

Monday 18 October 2010

தெரியாது


இரண்டு வருடத்திற்க்கு முதல் உன்னை எனக்குத் தெரியாது....ஆனால் இப்போது உன்னைவிட தெரிந்தவர் யாருமில்லை... தற்ப்போது என்னை எனக்கே தெரியாதுபோகிறது....

சினிமா

கூடலால் வந்த ஊடலிற்க்குப் பாட்டிசைப்பதுதான் தற்க்கால சினிமா....

முத்தம்

சத்தம் இன்றி யுத்தம் செய்யும், நவீன நாசக்காரியின் ஆயுதம் தான் முத்தம்...

ஆடவர்


''நில்'' என நிற்பாய்.. ''செல்'' என செல்வாய்.. தற்க்காலத் தையலின் கையில் ஆடவர் ... காரணம் காதலென்பாய்...

சொர்ப்பணம்

பக்கம் வந்து துக்கம் போக்கி பல சொர்க்கம் காட்டும் ஒரு சொர்ப்பணம் தானடி பெண்ணே நீ...

மோகம்

மோகம் வந்தபின் போகுமே விளைபோகம் .. சாகவும் வந்ததே ஒரு பாகம்..

இரவல்

இரவை இரவல் வாங்கும் இடர்பாட்டில் எனது மனது காரணம் மாது மேற்க்கொண்ட மோகம்...

மெளனத்தின் பிடியில்

மனதோ பாரம் இடைவெளியோ தூரம் .. வார்த்தைகளோ மனதின் ஓரம் .. உதடெல்லாம் ஈரம்.. உணர்ச்சிகளோ கிளர்ச்சிகளாக ..
மெளனத்தின் பிடியில் நானும் அவளும்..

தாகம்

எனது பேனாவின் மை எனும் திராவகம் தீர்ந்தாலும் தீராது என் எண்ணத்தை எழுத்துருவாக்கும் தாகம்...

பாரதி இல்லை

இக்காலத்தில் பாரதி இல்லை என்று மகிழ்ச்சியடைபவனில் நானும் ஒருதன்.. ஏனெனில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் அதீதவளர்ச்சி கண்டு ......

Friday 1 October 2010

கவிதைகளாய் வந்தன

எண்ணத்திற்க்குக் கருக் கொடுக்கும் உன் கண்கள் என் பேனாவிற்க்கு உயிர் கொடுக்கும் உன் நினைவுகள் ... கவிதைகளாய் வந்தன இறுதியில்..

அதிஸ்டம்

அதிஸ்டம் வேண்டிக் கோயிலிற்க்குச் சென்றேன் .. உன் துரதிஸ்டம் நீ என் கண்ணில்ப் பட்டாய் கனவு தேவதையாய்..

துடிக்கிறேன்

உனக்குள் என்னைத் தெரியாது தொலைத்தேன் காதல் வரமுன் ..
ஒவ்வொரு கணமும் உனக்குள் என்னைத் தொலைக்கத் துடிக்கிறேன்
காதல் வந்தபின்

உன் சிரிப்பு

உனக்குத் தெரியுமா உன் உயிருள்ள சிரிப்பு என் ஊனமான கவிதைகளிற்க்கு உயிர் கொடுப்பதை

மழை நேர வானவில்


நீ என்னைக் காதலிக்க மறுத்தாலும் உன் நிழல் மறுப்பு சொல்லவில்லையே உன் நிறமற்ற நிழலிற்க்கு நிறம் தீட்டிக் காதலிக்கிறேன் மழை நேர வானவில் போல்...

Thursday 30 September 2010

சினம்

வஞ்சையும் புஞ்சையும் விளைந்தவிடத்தே
ரத்தமும் சதையுமாய் விளைந்தது இத்தேகம்
காலம் வளர தேகம் வளர... வளர்ந்தது இவ்வெஞ்சினமும்
இது சந்தர்ப்பங்களாலும் சந்ததிகளாலும் உருவாக்கப்பட்டது
சத்தியங்களையும் சபதங்களையும் கடந்து நிற்பது ..

அன்புச்சினம் அழகானது அனைவராலும் அறியப்பட்டது
காலத்தின் கோலமாய் தாய் மகன் மீது காட்டுவதும்
மகன் தாய் மீது காட்டுவதும் அழகான அன்புச்சினம்
இது எல்லையற்ற பாசத்தின் வெளிப்பாடு ...

செங்குருதியின் செருக்கும், குருதியின் ஓட்ட வேகமும் துடிப்பும்
நாட்டமுள்ள நல்லெண்ணங்களும்.. மறுப்பு சொன்னால்
வெறுப்புக் கொண்டு செருக்கெடுக்கும்
வீரம் விழைந்த வெஞ்சினங் கொண்ட இளநெஞ்சங்கள் கொள்வது
முன் கோபம் ...

சுண்டிய குருதியும், சூட்சம குணமும்,
திடகாத்திர மனமும் திகழ..
பட்ட துயரை வெட்டிச் சாய்க்க
தக்க தருணம் வேண்டி துயில் கலைத்து
விழித் துளி நீர் துடைத்து விடிய விடிய
விரதம் இருந்து பெற்ற வரம் பிற்க் கோபம் ..

மகிழ்ச்சியின் சூட்சியாய் இருப்பது கொடுக்கும் வாக்குறுதி..
அதுபோல் வெஞ்சினத்தை வேரோடு சாய்ப்பது எடுக்கப்படும் திடீர் முடிவுகள்

அரசன் ஆண்டியாவதும், ஆண்டி அரசனாவதும் விதி
இது விதியின் தத்துவம் ...
ஆக்கப்பட்டவையாலேயே அழிக்கப்படுவது மானிடத்தின் விதி
இதில் தப்பிச் செல்ல இங்கேது வழி...
ஆனால் விதியை மதியால் மிதி
இது சான்றோர் குறி
அதன் படி நீ நடத் துடி ...

இங்கு சினத்தை வகையிட முனைந்ததின் காரணம் சினம்
விதியை விளக்கிட முனைந்ததின் காரணம் விதி..என் தலைவிதி..
சினத்தை சிறையிட முயன்றவன் பேசுகிறேன்
விதியை விலங்கிட முயன்றவன் பேசுகிறேன் ...

Monday 20 September 2010

ஓர் உண்மைக் கதை :- பகுதி - 6

எனது நாட்டிற்க்கு என்னைப் பிரிவது கவலையாக இருந்தாலும், நாடு கவலைப் பட்டா நமக்கென்ன இலாபம்.... என்று என் மனதிற்க்கு நானே ஆறுதல் கூறியபடி பெருமூச்சு விடுகிறேன், அப்போது அருகில் அசந்திருந்தவர் அருண்டபடி என்னைப் பார்க்கிறார் நானும் அவரைப் பார்த்து வர மறுத்த சிரிப்பை வில்லங்கத்திற்க்கு வர வைக்க அதுவும் வாடிய பூ போல் வந்து விழுந்தது என் உதட்டோரம்.. அதன்பின் அந்த நீண்ட நேரப் பயணத்திற்க்கு உயிர்கொடுத்துக்கொண்டிருந்தது, என்றும் மறவாத என்னுள் எப்போதும் இடம் பிடிக்கும் இனிமையான நினைவுகள் ..... இடையிடையே..அப்பப்போ வந்து போகும் கோடைகால மழை போல்..... வந்து போன ஒரு சில கசப்பான சம்பவங்கள் இவையனைத்தும் செக்கு மாடு போல் என் மூளைக்குள் சுற்றி வந்தன..

இவ்வாறு எனது யோசனையின் வேகம் அதிகரிக்க .. அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த நித்திரை எனும் ஓய்வைக் கொடுக்கிறேன் என் கண்களிற்க்கும் மூளைக்கும் ..... ஆனால் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல் என் கனவிலும் நினைவுகள் விட்டு விட்டு கொலை செய்தன.. இப்படியாக முடிவற்ற போராட்டத்தை முடிவிற்க்குக் கொண்டுவர முயற்சிக்கிறேன், புதைகுழியில் விழுந்த மனிதனைப் போல் .. ஆட்டம் எனும் நினைவுகள் கூட ஆபத்துக்கள் அதிகம் என்பதால் நினைவுகளிற்க்குப் பூட்டுப் போட்டு சாவியைத் தலையைச் சுற்றி எறியும் போது எனது கை இருக்கையில்ப் பட்டு கண்ணயர்ந்து பார்க்கிறேன் கண்களிலிருந்து முகம் வழியே தவழ்ந்து வந்த கண்ணீர்த்துளி கையை நனைப்பதை....

Friday 17 September 2010

வைத்தியம் செய்கிறது


உச்சி மண்டையில சுர் என்று ஏறும் உன் நினைப்பு பிச்சுப் பிச்சு வைக்க இச் என்ற உன் முத்தம் வைத்தியம் செய்கிறது ..

துடிக்குதடி


என் சித்தமும் பித்தங்கொண்டு துடிக்குதடி நித்தமும் உன்னைக் காணும் போது ...

ஓர் உண்மைக் கதை :- பகுதி - 5

என்றென்றும் நீங்காத நினைவுகளும் என்றுமே ஆறாத மனக் காயங்களும்.. தனிமையில் துணை வரும் நிழல் போல் போகும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து வரப் பிரிவு எனும் பயம் என்னைக் கவ்விக்கொள்கிறது... தட்டுத்தடுமாறியபடி தள்ளாடி நடக்கிறேன் அந்தப் பளிங்குப் பாதையில் .....

இன்றுமுதல் நானும் ஒரு சுமைதாங்கி தான் என்பதுடன் நான் முதலில் சுமப்பது எனது நினைவுகளைதான் என்று எனக்குள் நானெடுத்த முடிவு அது ...சாதாரணமாக முடிவு என்பது கோடைகாலக் கானல்நீர் போல் காலங்கழியக் கழிய கண்காணது போய்விடும் ... இவ்வாறாக இறுதியில் நான் எனது விமான இருக்கையைத் தேடிச்சென்று அமர்ந்தேன்...

சிறிது நேரத்தின் பின் விமானம் ஓடுபாதையில் ஓடி விண்ணிற்க்கு எழுந்து பறந்தது.. அப்போதுதான் உணர்ந்தேன் எனது கனவுகளிற்க்கு இறக்கை முளைத்துப் பறப்பதுபோல் ...
தற்செயலாக விமானத்தின் கண்ணாடி ஜன்னல்களினூடாக வெளியே பார்க்கிறேன் ... பார்க்கடல் கடைய வந்த அமுதம் போல் வானவெளியெங்கும் பரந்து கிடக்கிறது அந்த வெண்மேகங்களும் கார்மேகங்களும்..... எப்படியோ எனது சோகத்தையும் பிரிவையும் அறிந்துகொண்டு மறக்காது கண்ணீர் எனும் மழையைப் பொழிந்தது .. அப்போது உணர்ந்து கொண்டேன் பிரிவு எனக்கு மட்டுமல்ல... எந்நாட்டிற்க்கும் என்னைப் பிரிவது கவலை என்று....

Sunday 12 September 2010

ஓர் உண்மைக் கதை :- பகுதி - 4

விளி வழி கண்ணீர்த் துளிகளைத் தூவி ஓர் பெரிய கண்ணீர் மழைக்கு தயார்ப்படுத்த, வீலிட்டு வந்த அழுகையை வீம்பிற்க்கு அடக்கிப் புன்னகை பூத்த முகத்துடன் தளதளத்த குரலுடன் '' கவனமாய்ப் போய் வா மோனை'' என்ற வார்த்தைகளைக் கூற நானும் கண் கலங்கியபடி ''அழாதேங்கோ அம்மா'' என்று கூறிய படி எனது உடன் பிறந்த இரண்டாம் அன்னை ஸ்தானத்திற்க்குரிய எனது ஆருயுர்ச் சகோதரியின் முகத்தைப் பார்க்கிறேன்....

அன்றலர்ந்த தாமரை போல் இருந்த முகம் ஒளியிழந்த சூரியனைப் போல் ஒரு வாட்டம், இவையனைத்தும் எனது குடும்பம்பட்ட கஸ்டம் மற்றும் கவலைகள் என்று சொல்லி வார்த்தைகளால் முடித்துக் கொள்ள என் மனமும் எனது பேனாவும் இடங் கொடுக்கவில்லை..

சொல்லிலடங்காத சோகங்கள் சொல்லித் தீராத துயரங்கள் இவையனைத்தும் தூக்கில் ஏற்றியபடி எனது விமானத்தை நோக்கி நடந்து சென்றேன் ஒரு நடை பிணமாய்.......

ஆனால் ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும் மறு பக்கம் அழவற்ற மகிழ்ச்சி, ஒரு பெண் பிள்ளையைக் கட்டிக்கொடுத்து கரை சேர்த்தளவு மகிழ்ச்சி எனது அம்மாவின் முகத்தில்... இவ்வாறு இதை எண்ணி நடந்து கொண்டருந்த போது எனக்கொரு யோசனை.. இன்னமும் ஒன்றும் கெட்டுவிடவில்லை இப்பொழுதும் நான் வீடுதிரும்பலாம் என்று..... ஆனால் எனது குடும்பம் பட்ட கஸ்டங்கள் என்னைச் சிலுவையில் ஏற்றி ஆணியறைந்தது....

Friday 10 September 2010

காரணம் என்ன

காதலித்த போது கனவிலும் வர மறுத்த நீ... போகும் இடமெல்லாம் என்றும் நீங்காத நினைவுகளாய் என்னை நிலைகுலைய வைத்தமைக்குக் காரணம் என்ன.. ??

காதலி கிடைக்கும் வரை

காதலி கிடைக்கும் வரை.. கண்ணே, மணியே முத்தே...
காதலி கிடைத்த பின் ...காதலும் காற்றினில்க் காற்றாட கண்டபடி செந்தமிழ் மெட்டு.....

பகல்த் தூக்கம்

அதிகாலைப் பனிபோல் அப்பப்போ வந்து போன உனது நினைவுகளிற்க்கு உயிர் கொடுக்க நானெடுத்த முயற்சி பகல்த் தூக்கம்

இங்கிலாந்து வாசி

இன்னல்களிற்க்கு இடங்கொடுத்து, இரவல்ப் பட்டு, இரவில் இடர் பட்டு இறுதிவரை இதுதான் வாழ்க்கை என இறுதி முடிவெடுக்கும் இங்கிலாந்து வாசி நான்..

எனக்குணர்த்துவது

இரவில் வரும் கனவுகள், என்றும் இருளாத உன் நினைவுகள், இருளிற்க்கு ஒளி கொடுக்கும் உன் எண்ணங்கள் எல்லாம் எனக்குணர்த்துவது நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று....

Thursday 9 September 2010

கனவு

பகலில்க் கண்ட காட்சியை இரவில், கனவு எனும் திரையில் மீள் விழுத்தும் ஒளிப்பதிவு

ஓர் உண்மைக் கதை :- பகுதி - 3

அதனையடுத்து எனது பயண நாளும் நெருங்கியது.. அன்றுதான் எனது வீட்டிற்க்கும், நாட்டிற்க்கும் ஒரு கால வரையறையற்ற விடுமுறையை விட்டபடி விமானநிலையத்திற்க்கு அழைத்துச் செல்லும் வாகனத்தில் ஏறி அமர்ந்தேன்...

விமானநிலையத்தைச் சென்றடையும் வரையும், உயரப் பறக்கும் பட்டம் போல் ஒரு எல்லை இல்லாத வானத்தை எப்படியாவது முட்டி விடலாம் என்ற எண்ணத்துடன், நிஜத்திற்க்கு கறுப்பு நிறம் தீட்டி கற்பனை காணும் எண்ணங்கள் மட்டுமே என்னுடன் தவழ்ந்தன...

விமானநிலையத்தை வந்தடைந்ததும் எனது மனதிற்க்குள் ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு; அது மகிழ்ச்சியா இல்லை கவலையா, கோபமா இல்லைத் தாபமா என்று வேறுபடுத்திப் பார்க்க யோசனை செய்கிறது எனது மூளை, இறுதியில் பதில் எதுவும் கிடைக்காமல் குழப்பத்தின் மத்தியில் ஆமையின் வேகத்தில் எனது காலடியை நகர்த்தினேன்...

அதன் பின்னர் எனது குடும்பத்தையும் என்னையும் பிரிக்கும் வேலிக்கருகில் நெருங்கினேன், அதுதான் எனது விமானத்தைச் சென்றடைய உதவும் பாதை, அதில் விமானப் பயணிகள் மாத்திரமே உள் நுழைய முடியும் ...

அதைவிட அந்த அறுந்து போன அரசாங்கம் அறியுமா அம்மாவின் பாசம், முட்டையிட்ட கோழிக்குத்தானே வலி தெரியும். இதுவரை என்னை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்க்குள் மட்டும் வளர்த்து வந்த எனது அம்மா, இக்காத தூரம் அனுப்புவதற்க்கு அம்மாவைத் தூண்டிய காரணங்கள் என்ன வென்று இதுவரை எனக்குப் புரியவில்லை.. அதை அறிந்துகொள்ளும் ஆர்வமும் எனக்கு இருக்கவில்லை. காலம் கனியும் போது அம்மா கூறுவார் என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே இருந்தது....

Wednesday 8 September 2010

காதல் இலவசம்

காதல் இலவசம்.... இவன் அவள் வசம்.. ஆனால் அவளோ.. ஆட்சியின் கைவசம்... இறுதியில் இவன் தனிமையில் தன்வசம்

Tuesday 7 September 2010

ஓர் உண்மைக் கதை :- பகுதி - 2

எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி மட்டுமே இருந்தது, எனது குடும்பம் பட்ட கஸ்டங்களிற்க்கு விடுமுறை அந்தன்று...

எனது பயணத்திற்க்குத் தேவையான பொருடக்களைக் கொள்வனவு செய்வதுடனும் இங்கிலாந்தில் கொண்டு சென்று உபயோகிக்கத்தேவையான பொருட்களையும், ஒரு புதிய கடை ஒன்றிற்க்குக் கொள்வனவு செய்வதுபோல் செய்து கொண்டிருக்கும் போதுதான் எனக்கு பேரிடி ஒன்று ஞாபகம் வந்தது..

அந்த அறுந்துபோன அரசாங்கம், கொண்டுசெல்லும் எடையின் அளவை மட்டுப்படுத்திய விடயம் .... என்ன செய்ய கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் ...

மறுநாள் இதை மறந்து இங்கிலாந்தில் படப்போகும் கஸ்டங்களிற்க்கும், எனது இங்குள்ள மகிழ்ச்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக ஒரு விருந்துபசாரம் எனது நண்பர்களுடன் ....

கோயிலிற்க்கு நேந்துவிட்ட கடாவிற்க்குத் தெரியுமா தனது ஈமைக் கிரியைகள் கோயிலித்தான் என்று... அதுபோல் நான் இங்கிலாந்திற்க்கு நேந்து விடப்பட்டவன் என்று எனக்கு அன்று விளங்கவில்லை.. அதை விளங்கிக்கொள்ளும் நிலைமையிலும் நான் இருக்கவில்லை .... இது எனக்கு மட்டுமல்ல நம்மவர்களில் பலரிற்க்குப் பொருந்தும்.....


தொடரும்......

Sunday 5 September 2010

ஓர் உண்மைக் கதை :- பகுதி - 1

நானோ ஒரு சுதந்திரப் பறவை எந்நாட்டில் அந்த பாழ்பட்ட விசா கிடைக்கும் வரை...
நானும் பலரைப் போலே எனது கற்ப்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு இங்கிலாந்து சென்று வாழப்போகும் ஒரு இனிமையான வாழ்வை எண்ணிப் பகல்க் கனவுகண்டு பேரூந்தைத் தவறவிட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.. இது சில நாட்க்கனவல்ல, இரண்டு வருடக்கனவு எப்படியும் நிறைவேறும் என்ற எண்ணத்துடன் எனது படிப்பை முடித்துக்கொண்டு மேலதிகப் படிப்பிற்க்காக இங்கிலாந்து செல்வதுதான் எனதெண்ணம்..

ஆனால் நாம் நினைப்பததொன்று நடப்பதொன்று.. இது ஆண்டவன் வகுத்த வழி ஆனால் நான் அதற்கு எப்படி விதிவிலகாகேலும்.. என்னையும் பணம் எனும் கார்மேகம் சூழ்ந்து திண்டாட்டம் எனும் மழையைப் பொழிந்தது..

இறுதியாக நாய் படாப் பாடுபட்டு எனது குடும்பத்தின் உதவியுடனும் உறவினரின் உதவியுடனும் ஒருவழியாக விசாவிற்க்கு எனது விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைத்தேன்..

அனுப்பிய இரண்டாம் நாளே எனது விசாவின் முடிவைத் தெரிந்து கொள்வதற்க்கு கனணி முன்னால் கடுந்தவம் இருந்த காலங்களிற்க்கு கணக்கில்லை..

விசாவின் முடிவு வரும் வரை எனது காதலி முதல் மனைவி வரை எல்லாம் அந்த இத்துப்போன கனணி தான்.. இப்படியாக பல்கலைக்கழகம் ஆரம்பிக்கும் நாளும் நெருங்கியது எனது கனணிக்கும் எனக்கும் விடிவு காலம் பிறந்தது... அதுதான் அந்தப் பாழ்பட்ட விசா கையில் கிடைத்த நாள்.



தொடரும்...

Wednesday 1 September 2010

சம்மதித்தால்

நீ சம்மதித்தால் உனக்காக ஒன்றல்ல ஆயிரம் தாஜ்மகால் கட்ட நான் தயார்..

வெட்டில்பூச்சி

நெருப்பு வெட்டில்பூச்சியை வெறுத்தாலும்
அவை நெருப்பை வெறுப்பதில்லை.. நெருப்பை நோக்கிச் செல்வதை நிறுத்துவதில்லை..
அதுபோலவே நானும் பெண்ணே..

என்ன செய்தாய்

நீ எனக்காக என்ன செய்தாய்..?
நான் உனக்காக என்ன செய்தேன் .. ?
இப்படியிருக்க எதற்க்காக ஊடலுடன் ஒரு மோதல்...
இது நட்பா... காதலா...??

குறைவில்லை

நீ என்னருகில் இருந்த காலங்கள் குறைவானாலும் .
என் மனதில் நீ இருந்த காலங்களிற்க்கு குறைவில்லை..

கோபமா என்மீது

கொடுத்த முத்த ஈரம் காய்வதற்க்குள் முறிக்க முயற்சி எதற்க்குப் பெண்ணே...
நீ கொடுத்த முத்தத்தைத் திருப்பித்தரவில்லை எனக் கோபமா என்மீது..???