அதனையடுத்து எனது பயண நாளும் நெருங்கியது.. அன்றுதான் எனது வீட்டிற்க்கும், நாட்டிற்க்கும் ஒரு கால வரையறையற்ற விடுமுறையை விட்டபடி விமானநிலையத்திற்க்கு அழைத்துச் செல்லும் வாகனத்தில் ஏறி அமர்ந்தேன்...
விமானநிலையத்தைச் சென்றடையும் வரையும், உயரப் பறக்கும் பட்டம் போல் ஒரு எல்லை இல்லாத வானத்தை எப்படியாவது முட்டி விடலாம் என்ற எண்ணத்துடன், நிஜத்திற்க்கு கறுப்பு நிறம் தீட்டி கற்பனை காணும் எண்ணங்கள் மட்டுமே என்னுடன் தவழ்ந்தன...
விமானநிலையத்தை வந்தடைந்ததும் எனது மனதிற்க்குள் ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு; அது மகிழ்ச்சியா இல்லை கவலையா, கோபமா இல்லைத் தாபமா என்று வேறுபடுத்திப் பார்க்க யோசனை செய்கிறது எனது மூளை, இறுதியில் பதில் எதுவும் கிடைக்காமல் குழப்பத்தின் மத்தியில் ஆமையின் வேகத்தில் எனது காலடியை நகர்த்தினேன்...
அதன் பின்னர் எனது குடும்பத்தையும் என்னையும் பிரிக்கும் வேலிக்கருகில் நெருங்கினேன், அதுதான் எனது விமானத்தைச் சென்றடைய உதவும் பாதை, அதில் விமானப் பயணிகள் மாத்திரமே உள் நுழைய முடியும் ...
அதைவிட அந்த அறுந்து போன அரசாங்கம் அறியுமா அம்மாவின் பாசம், முட்டையிட்ட கோழிக்குத்தானே வலி தெரியும். இதுவரை என்னை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்க்குள் மட்டும் வளர்த்து வந்த எனது அம்மா, இக்காத தூரம் அனுப்புவதற்க்கு அம்மாவைத் தூண்டிய காரணங்கள் என்ன வென்று இதுவரை எனக்குப் புரியவில்லை.. அதை அறிந்துகொள்ளும் ஆர்வமும் எனக்கு இருக்கவில்லை. காலம் கனியும் போது அம்மா கூறுவார் என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே இருந்தது....
No comments:
Post a Comment