என்றென்றும் நீங்காத நினைவுகளும் என்றுமே ஆறாத மனக் காயங்களும்.. தனிமையில் துணை வரும் நிழல் போல் போகும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து வரப் பிரிவு எனும் பயம் என்னைக் கவ்விக்கொள்கிறது... தட்டுத்தடுமாறியபடி தள்ளாடி நடக்கிறேன் அந்தப் பளிங்குப் பாதையில் .....
இன்றுமுதல் நானும் ஒரு சுமைதாங்கி தான் என்பதுடன் நான் முதலில் சுமப்பது எனது நினைவுகளைதான் என்று எனக்குள் நானெடுத்த முடிவு அது ...சாதாரணமாக முடிவு என்பது கோடைகாலக் கானல்நீர் போல் காலங்கழியக் கழிய கண்காணது போய்விடும் ... இவ்வாறாக இறுதியில் நான் எனது விமான இருக்கையைத் தேடிச்சென்று அமர்ந்தேன்...
சிறிது நேரத்தின் பின் விமானம் ஓடுபாதையில் ஓடி விண்ணிற்க்கு எழுந்து பறந்தது.. அப்போதுதான் உணர்ந்தேன் எனது கனவுகளிற்க்கு இறக்கை முளைத்துப் பறப்பதுபோல் ...
தற்செயலாக விமானத்தின் கண்ணாடி ஜன்னல்களினூடாக வெளியே பார்க்கிறேன் ... பார்க்கடல் கடைய வந்த அமுதம் போல் வானவெளியெங்கும் பரந்து கிடக்கிறது அந்த வெண்மேகங்களும் கார்மேகங்களும்..... எப்படியோ எனது சோகத்தையும் பிரிவையும் அறிந்துகொண்டு மறக்காது கண்ணீர் எனும் மழையைப் பொழிந்தது .. அப்போது உணர்ந்து கொண்டேன் பிரிவு எனக்கு மட்டுமல்ல... எந்நாட்டிற்க்கும் என்னைப் பிரிவது கவலை என்று....
No comments:
Post a Comment