விளி வழி கண்ணீர்த் துளிகளைத் தூவி ஓர் பெரிய கண்ணீர் மழைக்கு தயார்ப்படுத்த, வீலிட்டு வந்த அழுகையை வீம்பிற்க்கு அடக்கிப் புன்னகை பூத்த முகத்துடன் தளதளத்த குரலுடன் '' கவனமாய்ப் போய் வா மோனை'' என்ற வார்த்தைகளைக் கூற நானும் கண் கலங்கியபடி ''அழாதேங்கோ அம்மா'' என்று கூறிய படி எனது உடன் பிறந்த இரண்டாம் அன்னை ஸ்தானத்திற்க்குரிய எனது ஆருயுர்ச் சகோதரியின் முகத்தைப் பார்க்கிறேன்....
அன்றலர்ந்த தாமரை போல் இருந்த முகம் ஒளியிழந்த சூரியனைப் போல் ஒரு வாட்டம், இவையனைத்தும் எனது குடும்பம்பட்ட கஸ்டம் மற்றும் கவலைகள் என்று சொல்லி வார்த்தைகளால் முடித்துக் கொள்ள என் மனமும் எனது பேனாவும் இடங் கொடுக்கவில்லை..
சொல்லிலடங்காத சோகங்கள் சொல்லித் தீராத துயரங்கள் இவையனைத்தும் தூக்கில் ஏற்றியபடி எனது விமானத்தை நோக்கி நடந்து சென்றேன் ஒரு நடை பிணமாய்.......
ஆனால் ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும் மறு பக்கம் அழவற்ற மகிழ்ச்சி, ஒரு பெண் பிள்ளையைக் கட்டிக்கொடுத்து கரை சேர்த்தளவு மகிழ்ச்சி எனது அம்மாவின் முகத்தில்... இவ்வாறு இதை எண்ணி நடந்து கொண்டருந்த போது எனக்கொரு யோசனை.. இன்னமும் ஒன்றும் கெட்டுவிடவில்லை இப்பொழுதும் நான் வீடுதிரும்பலாம் என்று..... ஆனால் எனது குடும்பம் பட்ட கஸ்டங்கள் என்னைச் சிலுவையில் ஏற்றி ஆணியறைந்தது....
No comments:
Post a Comment