நானோ ஒரு சுதந்திரப் பறவை எந்நாட்டில் அந்த பாழ்பட்ட விசா கிடைக்கும் வரை...
நானும் பலரைப் போலே எனது கற்ப்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு இங்கிலாந்து சென்று வாழப்போகும் ஒரு இனிமையான வாழ்வை எண்ணிப் பகல்க் கனவுகண்டு பேரூந்தைத் தவறவிட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.. இது சில நாட்க்கனவல்ல, இரண்டு வருடக்கனவு எப்படியும் நிறைவேறும் என்ற எண்ணத்துடன் எனது படிப்பை முடித்துக்கொண்டு மேலதிகப் படிப்பிற்க்காக இங்கிலாந்து செல்வதுதான் எனதெண்ணம்..
ஆனால் நாம் நினைப்பததொன்று நடப்பதொன்று.. இது ஆண்டவன் வகுத்த வழி ஆனால் நான் அதற்கு எப்படி விதிவிலகாகேலும்.. என்னையும் பணம் எனும் கார்மேகம் சூழ்ந்து திண்டாட்டம் எனும் மழையைப் பொழிந்தது..
இறுதியாக நாய் படாப் பாடுபட்டு எனது குடும்பத்தின் உதவியுடனும் உறவினரின் உதவியுடனும் ஒருவழியாக விசாவிற்க்கு எனது விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைத்தேன்..
அனுப்பிய இரண்டாம் நாளே எனது விசாவின் முடிவைத் தெரிந்து கொள்வதற்க்கு கனணி முன்னால் கடுந்தவம் இருந்த காலங்களிற்க்கு கணக்கில்லை..
விசாவின் முடிவு வரும் வரை எனது காதலி முதல் மனைவி வரை எல்லாம் அந்த இத்துப்போன கனணி தான்.. இப்படியாக பல்கலைக்கழகம் ஆரம்பிக்கும் நாளும் நெருங்கியது எனது கனணிக்கும் எனக்கும் விடிவு காலம் பிறந்தது... அதுதான் அந்தப் பாழ்பட்ட விசா கையில் கிடைத்த நாள்.
தொடரும்...
No comments:
Post a Comment