Thursday, 30 September 2010

சினம்

வஞ்சையும் புஞ்சையும் விளைந்தவிடத்தே
ரத்தமும் சதையுமாய் விளைந்தது இத்தேகம்
காலம் வளர தேகம் வளர... வளர்ந்தது இவ்வெஞ்சினமும்
இது சந்தர்ப்பங்களாலும் சந்ததிகளாலும் உருவாக்கப்பட்டது
சத்தியங்களையும் சபதங்களையும் கடந்து நிற்பது ..

அன்புச்சினம் அழகானது அனைவராலும் அறியப்பட்டது
காலத்தின் கோலமாய் தாய் மகன் மீது காட்டுவதும்
மகன் தாய் மீது காட்டுவதும் அழகான அன்புச்சினம்
இது எல்லையற்ற பாசத்தின் வெளிப்பாடு ...

செங்குருதியின் செருக்கும், குருதியின் ஓட்ட வேகமும் துடிப்பும்
நாட்டமுள்ள நல்லெண்ணங்களும்.. மறுப்பு சொன்னால்
வெறுப்புக் கொண்டு செருக்கெடுக்கும்
வீரம் விழைந்த வெஞ்சினங் கொண்ட இளநெஞ்சங்கள் கொள்வது
முன் கோபம் ...

சுண்டிய குருதியும், சூட்சம குணமும்,
திடகாத்திர மனமும் திகழ..
பட்ட துயரை வெட்டிச் சாய்க்க
தக்க தருணம் வேண்டி துயில் கலைத்து
விழித் துளி நீர் துடைத்து விடிய விடிய
விரதம் இருந்து பெற்ற வரம் பிற்க் கோபம் ..

மகிழ்ச்சியின் சூட்சியாய் இருப்பது கொடுக்கும் வாக்குறுதி..
அதுபோல் வெஞ்சினத்தை வேரோடு சாய்ப்பது எடுக்கப்படும் திடீர் முடிவுகள்

அரசன் ஆண்டியாவதும், ஆண்டி அரசனாவதும் விதி
இது விதியின் தத்துவம் ...
ஆக்கப்பட்டவையாலேயே அழிக்கப்படுவது மானிடத்தின் விதி
இதில் தப்பிச் செல்ல இங்கேது வழி...
ஆனால் விதியை மதியால் மிதி
இது சான்றோர் குறி
அதன் படி நீ நடத் துடி ...

இங்கு சினத்தை வகையிட முனைந்ததின் காரணம் சினம்
விதியை விளக்கிட முனைந்ததின் காரணம் விதி..என் தலைவிதி..
சினத்தை சிறையிட முயன்றவன் பேசுகிறேன்
விதியை விலங்கிட முயன்றவன் பேசுகிறேன் ...

Monday, 20 September 2010

ஓர் உண்மைக் கதை :- பகுதி - 6

எனது நாட்டிற்க்கு என்னைப் பிரிவது கவலையாக இருந்தாலும், நாடு கவலைப் பட்டா நமக்கென்ன இலாபம்.... என்று என் மனதிற்க்கு நானே ஆறுதல் கூறியபடி பெருமூச்சு விடுகிறேன், அப்போது அருகில் அசந்திருந்தவர் அருண்டபடி என்னைப் பார்க்கிறார் நானும் அவரைப் பார்த்து வர மறுத்த சிரிப்பை வில்லங்கத்திற்க்கு வர வைக்க அதுவும் வாடிய பூ போல் வந்து விழுந்தது என் உதட்டோரம்.. அதன்பின் அந்த நீண்ட நேரப் பயணத்திற்க்கு உயிர்கொடுத்துக்கொண்டிருந்தது, என்றும் மறவாத என்னுள் எப்போதும் இடம் பிடிக்கும் இனிமையான நினைவுகள் ..... இடையிடையே..அப்பப்போ வந்து போகும் கோடைகால மழை போல்..... வந்து போன ஒரு சில கசப்பான சம்பவங்கள் இவையனைத்தும் செக்கு மாடு போல் என் மூளைக்குள் சுற்றி வந்தன..

இவ்வாறு எனது யோசனையின் வேகம் அதிகரிக்க .. அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த நித்திரை எனும் ஓய்வைக் கொடுக்கிறேன் என் கண்களிற்க்கும் மூளைக்கும் ..... ஆனால் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல் என் கனவிலும் நினைவுகள் விட்டு விட்டு கொலை செய்தன.. இப்படியாக முடிவற்ற போராட்டத்தை முடிவிற்க்குக் கொண்டுவர முயற்சிக்கிறேன், புதைகுழியில் விழுந்த மனிதனைப் போல் .. ஆட்டம் எனும் நினைவுகள் கூட ஆபத்துக்கள் அதிகம் என்பதால் நினைவுகளிற்க்குப் பூட்டுப் போட்டு சாவியைத் தலையைச் சுற்றி எறியும் போது எனது கை இருக்கையில்ப் பட்டு கண்ணயர்ந்து பார்க்கிறேன் கண்களிலிருந்து முகம் வழியே தவழ்ந்து வந்த கண்ணீர்த்துளி கையை நனைப்பதை....

Friday, 17 September 2010

வைத்தியம் செய்கிறது


உச்சி மண்டையில சுர் என்று ஏறும் உன் நினைப்பு பிச்சுப் பிச்சு வைக்க இச் என்ற உன் முத்தம் வைத்தியம் செய்கிறது ..

துடிக்குதடி


என் சித்தமும் பித்தங்கொண்டு துடிக்குதடி நித்தமும் உன்னைக் காணும் போது ...

ஓர் உண்மைக் கதை :- பகுதி - 5

என்றென்றும் நீங்காத நினைவுகளும் என்றுமே ஆறாத மனக் காயங்களும்.. தனிமையில் துணை வரும் நிழல் போல் போகும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து வரப் பிரிவு எனும் பயம் என்னைக் கவ்விக்கொள்கிறது... தட்டுத்தடுமாறியபடி தள்ளாடி நடக்கிறேன் அந்தப் பளிங்குப் பாதையில் .....

இன்றுமுதல் நானும் ஒரு சுமைதாங்கி தான் என்பதுடன் நான் முதலில் சுமப்பது எனது நினைவுகளைதான் என்று எனக்குள் நானெடுத்த முடிவு அது ...சாதாரணமாக முடிவு என்பது கோடைகாலக் கானல்நீர் போல் காலங்கழியக் கழிய கண்காணது போய்விடும் ... இவ்வாறாக இறுதியில் நான் எனது விமான இருக்கையைத் தேடிச்சென்று அமர்ந்தேன்...

சிறிது நேரத்தின் பின் விமானம் ஓடுபாதையில் ஓடி விண்ணிற்க்கு எழுந்து பறந்தது.. அப்போதுதான் உணர்ந்தேன் எனது கனவுகளிற்க்கு இறக்கை முளைத்துப் பறப்பதுபோல் ...
தற்செயலாக விமானத்தின் கண்ணாடி ஜன்னல்களினூடாக வெளியே பார்க்கிறேன் ... பார்க்கடல் கடைய வந்த அமுதம் போல் வானவெளியெங்கும் பரந்து கிடக்கிறது அந்த வெண்மேகங்களும் கார்மேகங்களும்..... எப்படியோ எனது சோகத்தையும் பிரிவையும் அறிந்துகொண்டு மறக்காது கண்ணீர் எனும் மழையைப் பொழிந்தது .. அப்போது உணர்ந்து கொண்டேன் பிரிவு எனக்கு மட்டுமல்ல... எந்நாட்டிற்க்கும் என்னைப் பிரிவது கவலை என்று....

Sunday, 12 September 2010

ஓர் உண்மைக் கதை :- பகுதி - 4

விளி வழி கண்ணீர்த் துளிகளைத் தூவி ஓர் பெரிய கண்ணீர் மழைக்கு தயார்ப்படுத்த, வீலிட்டு வந்த அழுகையை வீம்பிற்க்கு அடக்கிப் புன்னகை பூத்த முகத்துடன் தளதளத்த குரலுடன் '' கவனமாய்ப் போய் வா மோனை'' என்ற வார்த்தைகளைக் கூற நானும் கண் கலங்கியபடி ''அழாதேங்கோ அம்மா'' என்று கூறிய படி எனது உடன் பிறந்த இரண்டாம் அன்னை ஸ்தானத்திற்க்குரிய எனது ஆருயுர்ச் சகோதரியின் முகத்தைப் பார்க்கிறேன்....

அன்றலர்ந்த தாமரை போல் இருந்த முகம் ஒளியிழந்த சூரியனைப் போல் ஒரு வாட்டம், இவையனைத்தும் எனது குடும்பம்பட்ட கஸ்டம் மற்றும் கவலைகள் என்று சொல்லி வார்த்தைகளால் முடித்துக் கொள்ள என் மனமும் எனது பேனாவும் இடங் கொடுக்கவில்லை..

சொல்லிலடங்காத சோகங்கள் சொல்லித் தீராத துயரங்கள் இவையனைத்தும் தூக்கில் ஏற்றியபடி எனது விமானத்தை நோக்கி நடந்து சென்றேன் ஒரு நடை பிணமாய்.......

ஆனால் ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும் மறு பக்கம் அழவற்ற மகிழ்ச்சி, ஒரு பெண் பிள்ளையைக் கட்டிக்கொடுத்து கரை சேர்த்தளவு மகிழ்ச்சி எனது அம்மாவின் முகத்தில்... இவ்வாறு இதை எண்ணி நடந்து கொண்டருந்த போது எனக்கொரு யோசனை.. இன்னமும் ஒன்றும் கெட்டுவிடவில்லை இப்பொழுதும் நான் வீடுதிரும்பலாம் என்று..... ஆனால் எனது குடும்பம் பட்ட கஸ்டங்கள் என்னைச் சிலுவையில் ஏற்றி ஆணியறைந்தது....

Friday, 10 September 2010

காரணம் என்ன

காதலித்த போது கனவிலும் வர மறுத்த நீ... போகும் இடமெல்லாம் என்றும் நீங்காத நினைவுகளாய் என்னை நிலைகுலைய வைத்தமைக்குக் காரணம் என்ன.. ??